பெண்களை அவமதித்த இயக்குநர்? திவ்ய பாரதி குண்டுவெடிப்பு போல வெளிப்படுத்திய உண்மை!
director who insulted women Divya Bharathi revealed truth bombshell
ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான திவ்ய பாரதி, அந்த படத்தின் வெற்றிக்குப் பின் ‘அடுத்த பெரிய ஹீரோயின்’ என ரசிகர்களாலும், சினிமா உலகத்தாலும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கைகூடாததால் ஒரு கட்டத்தில் களைப்பு நிலவியது. தற்போது அவர் முகன் ராவுடன் இணைந்து நடிக்கும் ‘மதி மேல் காதல்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

இதேநேரத்தில், தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான ‘பாகல்’ படத்தை இயக்கிய நரேஷ் குப்பிலியின் புதிய படத்தில் திவ்ய பாரதி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில படைப்பாற்றல் முரண்பாடுகள் காரணமாக திடீரெனத் திட்டத்திலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் நரேஷ் கூட அதே படத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் சமூக வலைதளங்களில் திவ்ய பாரதியை மறைமுகமாக தாக்கிக்கொண்டும், தெலுங்கில் பெண்களை இழிவாகக் குறிக்கப் பயன்படுத்தப்படும் “சிலாகா” என்ற சொல்லையும் அவர் பயன்படுத்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சூழ்நிலையில், தெலுங்கு படமான “கோட்” படப்பிடிப்பு தளத்தில் அவர் சந்தித்த அவமானகரமான அனுபவங்களைத் திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பதிவு செய்யும்போது கூறியதாவது,“பெண்களை இழிவாக அழைக்கும் அந்தச் சொல் நகைச்சுவையல்ல; அது பெண்களை இகழும் மனநிலையின் வெளிப்பாடு. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் பெண்களை தொடர்ந்து அவமரியாதை செய்தார். அதைவிட மோசமென்னவென்றால், இப்படத்தின் ஹீரோ சுடிகாலி சுதீருக்கு இதெல்லாம் தெரிந்திருந்தும் அவர் எதையும் தடுக்கவில்லை.
வேலை செய்யும் இடத்தில் கேலி, இழிவு, கிண்டல்கள் இல்லாத சூழல் வேண்டுமென்பதே என் ஒரே கோரிக்கை.” என்று அவர் கடுமையாக பதிவு செய்துள்ளார்.திவ்ய பாரதியின் இந்த வெடிக்கச்செய்த குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இயக்குநர் நரேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த வகையான பதிலும் வெளியாகவில்லை.
English Summary
director who insulted women Divya Bharathi revealed truth bombshell