16 வயதுக்கு உட்பட்டோருக்குச் சமூக வலைதளத் தடை: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தத் தடையின் ஒரு பகுதியாக, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்க வேண்டும் என்று டிக்-டாக், எக்ஸ் (ட்விட்டர்), மெட்டா (Meta) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அபராதம் குறித்த எச்சரிக்கை:

அரசாங்கத்தின் இந்த உத்தரவை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்குச் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு இன்னும் இரண்டு வாரங்களே அவகாசம் உள்ளதால், அவர்கள் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளை (Data)ப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை சிறுவர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா எடுத்துள்ள முக்கியமான முடிவாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia Social media 16 ban


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->