ஆட்சில் பங்கு கேட்கமாட்டோம் - ஒரே போடாக போட்ட பாஜக நயினார்! - Seithipunal
Seithipunal


கோவை வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 தேர்தல் கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்த தனது அதிரடி நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

கூட்டணிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், "ஆட்சியில் பங்கு கிடையாது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கறாராகக் கூறிவிட்டதைச் சுட்டிக்காட்டி, திமுக கூட்டணியின் பலவீனத்தை விமர்சித்தார்.

அதிமுக உடனான கூட்டணி மற்றும் எதிர்கால ஆட்சி அதிகாரம் குறித்து அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது: "நாங்கள் அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. சொல்லப்போனால், ஆட்சியில் பங்கு மட்டுமல்ல, அதிமுகவிடம் நாங்கள் எதையுமே கேட்கப்போவதில்லை." என்றார்.

தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தற்போதைய கூட்டணியின் முதன்மையான மற்றும் ஒற்றை நோக்கம் என அவர் முழங்கினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp nainar admk alliance


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->