55 பவுன் நகை கொள்ளையடித்த திமுக அமைக்கருக்கு நெருக்கமான நிர்வாகி கேரளா போலீசால் கைது - அண்ணாமலை கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ். 

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp annamalai dmk kn nehru kerala police robbery case


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->