கோவில் நிலங்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாகி வருகின்றன - பாஜக கடும் கண்டனம்!
BJP condemn to DMK Govt MK Stalin
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் 2036 வீடுகள் (குடும்பங்கள்) கட்டி சுமார் 10,000 மக்களை ஏமாற்றி ரூபாய். 2500 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய மோசடி நடந்திருப்பதாக சொல்லப்படுவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் இது கோவில் நிலம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 'Urban Rise' என்ற நிறுவனம் திட்டமிட்ட ரீதியில் மக்களை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள். கோவில் நிலம் என்பதை மறைத்து மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ஏமாற்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். மேலும் நிலப்பத்திரங்களை ஆய்வு செய்யாமல் வங்கிகள் எவ்வாறு மக்களுக்கு கடன் கொடுத்தன என்பதை தொடர்புடைய வங்கிகள் விளக்குவதோடு தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மேலும், கோவில் நிலம் என்பது எவ்வாறு மறைக்கப்பட்டது? பத்திரப்பதிவு துறையினர் எந்த அடிப்படையில் இந்த நிலத்தை பதிவு செய்து கொடுத்தனர்? கோவில் நிலங்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாகி வருகின்றன என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் யார் உள்ளனர், கோவில்களை, கோவில் சொத்துக்களை பாதுகாப்பதாக மார்தட்டிக் கொள்ளும் ஹிந்து அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பதையெல்லாம் விசாரித்து, இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவது தமிழக அரசின் கடமை. இது போன்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தான் 'திராவிட மாடல்' என்பதை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு தமிழக மக்களின் நலன் காப்பதாக மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து வாய் திறப்பாரா? நடவடிக்கை எடுப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP condemn to DMK Govt MK Stalin