திமுக-வை வீழ்த்த கிருஷ்ணசாமியின் 'நிலக்கோட்டை' வியூகம்!
puthiya thamilakam alliance dmk admk tvk
திண்டுக்கல் நிலக்கோட்டையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சி கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அரசுக்கு எதிராக முன்வைத்த அதிரடி விமர்சனங்களின் சுருக்கம் இதோ:திண்டுக்கல் தெற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளைஞரணி தலைவர் சியாம் கிருஷ்ணசாமியும் பங்கேற்றார்.
திமுக மீதான 'ஊழல்' மற்றும் 'வாரிசு' விமர்சனம்:
போதை மாநிலம்: தமிழகம் இன்று போதை மாநிலமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், மதுக்கடைகளை முழுமையாக மூடப் புதிய தமிழகம் கட்சித் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.
அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்: முக்கியத் துறைகளைக் கையாழும் 4 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை ஊழல் புகார்களைச் சுமத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைச் சாடினார்.
குடும்ப அரசியல்: "குடும்ப ஆட்சியும், வாரிசுகளின் வளர்ச்சியுமே பிரதானமாக உள்ளது; சமூக நீதி பேசும் அமைச்சர்கள் செல்வந்தர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர்" எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
2026 தேர்தல் கணக்கு:
கூட்டணி ஆட்சி உறுதி: வரும் தேர்தலில் தமிழகத்தில் தனிப்பெரும் ஆட்சிக்கு இடமில்லை; கூட்டணி ஆட்சியே அமையும் என்றும், அதில் புதிய தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கணித்துள்ளார்.
நிலக்கோட்டை சவால்: தனி மற்றும் பொதுத் தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்த அவர், குறிப்பாக நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் நிச்சயம் களம் காண்பார் என அறிவித்தார்.
English Summary
puthiya thamilakam alliance dmk admk tvk