அபிஷன் ஜீவிந்தின் டெப்யூ ஹீரோ படம்...! ரஜினி Launch செய்யும் டைட்டில் டீசர் Tomorrow ..!
Abhishan Jeevindhs debut hero film Rajinikanth launch title teaser Tomorrow
‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் பாராட்டுகள் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது புதிய அவதாரத்தில் - கதாநாயகனாக களமிறங்கி வருகிறார். இவருடன் இணைந்து, மலையாளத்தின் இளம் அசத்தல் நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். இசை அமைப்பில் ஷான் ரோல்டன் தனது ஸ்டைலிஷ் பீட்ஸை இணைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன், இந்த புதிய படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அபிஷன் வெளியிட்ட புதிய பிரமோ-வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மின்னல்போல் பரவி வருகிறது.
எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இந்த சிறப்பு முயற்சி, நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களை கவரத் தயாராகியுள்ளது. அதிலும் முக்கியமாக, படத்தின் டைட்டில் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக வெளியிட உள்ளார் என்பதால், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஹைப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
Abhishan Jeevindhs debut hero film Rajinikanth launch title teaser Tomorrow