'டாக்டர்களும், இன்ஜினியர்களும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது'; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்..!
The central government argues in the Supreme Court that it has become a norm for doctors and engineers to engage in antinational activities
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் டில்லியில் நடந்த போராட்டத்தில், ஏற்பட்ட கலவரத்தின் போது 50 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ வாதாடிய போது கூறியதாவது: 'அரசின் நிதியுதவியை பயன்படுத்தி அறிவுஜீவிகள் டாக்டர்கள் ஆகின்றனர். பிறகு அவர்கள் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்ட இமாம் பேசிய வீடியோ ஆதாரத்தை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கூறுகையில், 'இமாம் பொறியியல் பட்டதாரி. தற்போது டாக்டர்களும், இன்ஜினியர்களும் தங்களது துறைகளில் பணியில் ஈடுபடாமல், தேச விரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. கலவரம் என்பது திட்டமிட்ட சதி' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
The central government argues in the Supreme Court that it has become a norm for doctors and engineers to engage in antinational activities