பிரேம்ஜி வீட்டில் செம விசேஷம்..அப்பாவானார் பிரேம்ஜி! என்ன குழந்தை தெரியுமா? - Seithipunal
Seithipunal


திரையுலகில் எப்போதும் நகைச்சுவையும், துள்ளலான தன்மையும் கொண்ட நடிகர் பிரேம்ஜி, திருமணத்திற்குப் பிறகு முழுவதும் மாறி “குடும்பம் – கரியர்” என இரண்டு பக்கங்களையும் சமமாக கவனித்துவருகிறார்.

கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்து, சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். இன்று, பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரேம்ஜியின் இந்த சந்தோஷ தகவலை ‘வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது முகநூல் பக்கத்தில் முதலில் பகிர்ந்தார்.
கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை பெற்றவர்.

அவர் நடித்த பெரும்பாலான படங்களில், சகோதரர் வெங்கட் பிரபுவின் பங்கு முக்கியமானது. அதேபோல், சோஷியல் மீடியாவில் உருவான காதலான இந்துவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை முறையே மாற்றியுள்ளார்.

திருமணத்திற்கு பின், பார்ட்டி வாழ்க்கையை ஒதுக்கி, பொறுப்பான குடும்பஸ்தனாக மாறிய பிரேம்ஜி தந்தையாகி இருப்பது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரை உத்யோகத்தினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளால் பொங்கி வழிகின்றனர்.புதிய தந்தையாகிய பிரேம்ஜிக்கு கோலிவுட் முழுவதும் வாழ்த்துகள் குவிந்துக்கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A very special thing happened at Premji house Premji became a father Do you know what kind of child


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->