ஈக்வடாரில் கோர விபத்து: மலைப்பாதையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி
Ecuador Bus accident
ஈக்வடாரில் குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குவாரந்தா-அம்பாடோ சாலையில் உள்ள சிமியாடுக் பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், மலைப் பாதையில் இருந்து நிலைதடுமாறிய பேருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகளில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மற்றப் பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ஈக்வடாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.