Justice For Shalini: ராமேஸ்வரத்தில் நடந்திருப்பது மிக பெரிய கொடூரம்… தமிழ் திரைத்துறையிலிருந்து எழுந்த ஒரே குரல்! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், இன்று பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவிக்கு, முனிராஜ் என்ற இளைஞர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ், அவரை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்றான். மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராமேஸ்வரம் காவல்துறையினர் முனிராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், பிரபல நடிகர்பாலசரவணன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "ராமேஸ்வரத்தில் நடந்திருப்பது மிக பெரிய  கொடூரம்…

கல்விக்காக சாலையில் சென்று வரும் மாணவி மாணவர்களை மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கல்வியை மேற்கொள்வதற்கே அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்…

இனி இது போன்று செய்வதற்கு நினைத்து பார்க்க கூட அஞ்சும் அளவிற்கு கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்…

இக்குற்றவாளிக்கு உச்ச பட்ச தண்டனையை நீதி மன்றம் விரைந்து வழ்ங்க வேண்டும்…

மாணவி ஷாலினி குடும்பத்திற்கு அரசு அனைத்து வகையிலும் துனண நிற்க வேண்டும்…

பெண்கள் பாதுகாப்பையும் பெண் கல்வி பயில்வதை பாதுகாப்பதுமே எல்லாவற்றிற்கும் முதன்மையானதாகும்….


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rameshwaram school girl murder case actor bala saravanan condemn


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->