இனி கவலையில்லை: தெற்கு ரயில்வேயில் பார்சல் சேவைகளுக்கென 12 பெட்டிகள் கொண்ட பிரத்யேக ரயில் அறிமுகம்!
Train Southern Railway Parcel
சென்னை: தெற்கு ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, பார்சல்களை அனுப்புவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட ரயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 23 டன் பார்சல்களை ஏற்ற முடியும்.
விவரங்கள்
பாதை: மங்களூரு - சென்னை ராயபுரம்
அதிர்வெண்: வாரத்தில் ஒரு நாள்
மங்களூரு புறப்பாடு: டிசம்பர் 12
சென்னை வந்தடைதல்: டிசம்பர் 13, மதியம் 1.30 மணி
சென்னையில் இருந்து புறப்பாடு: டிசம்பர் 16, மாலை 3.45 மணி
ரயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துச் செல்லப்படும் இந்தப் பார்சல்களுக்கு மூன்று பிரிவுகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அடுத்த கட்டமாக, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாகத் திருவனந்தபுரத்துக்கு இந்தச் சேவையை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தனிப் பார்சல் ரயில், வர்த்தகப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியில் (Logistics) குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Train Southern Railway Parcel