திரிபுராவில் வேன் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து; 03 பேர் பலி..!
3 killed in accident as passenger train hits van in Tripura
திரிபுராவில் பிக் அப் வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் எஸ்கே பாரா ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. பிக்கப் வேனில் பயணித்தவர்கள் குறித்த விபத்தில் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. ரயில் மோதியதில் வேன் முற்றிலும் நொறுங்கிப்போயுள்ளது.
இது குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உ.பி.,யின் மிர்சாப்பூரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளமை றிப்பிடத்தக்கது.
English Summary
3 killed in accident as passenger train hits van in Tripura