நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் - மாணவர்கள் இடையே மோதலால் மீண்டும் பதற்றம்..!
Tensions rise again in Nepal due to clash between former Prime Ministers supporters and students
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது, ஊழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், நேபாளத்தின் பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீவைத்தனர். மாணவர்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல், அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவருடன் அமைச்சர்களும் பதவி விலகினர். இதனையடுத்து நீதியரசர் சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் மாணவர்கள் மற்றும் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதல் விமான நிலையம் அருகே வரையும் நீண்டதால், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் சுசிலா கார்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Tensions rise again in Nepal due to clash between former Prime Ministers supporters and students