அது எம்ஜிஆர் போட்ட பிச்சை... எம்ஜிஆர் காலில் விழுந்து தானே முதல்வர் ஆனார் உங்க தந்தை? வரலாறு தெரியாமல் உளறிய CM ஸ்டாலின் - அதிமுக பதிலடி! - Seithipunal
Seithipunal


அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வரலாறு தெரியாமல் உளறிய பொம்மை முதல்வர்!

நேற்று திருச்சி மாநாட்டில் பேசிய முதல்வர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்" என ஒரு வாதத்தை வைத்தார்.

1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா போட்டியிடவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, 1967 தேர்தலில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி.க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவே, தனது எம்.பி. பதவியைத் துறந்து, எம்.எல்.சி.யாக MLA-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார்.

அப்படியென்றால், ஸ்டாலின் வைத்த வாதப்படி அண்ணா மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையா?

சரி.. உங்கள் தந்தைக்கு வருவோம்.. 
அண்ணா மறைவுக்கு பிறகு உங்கள் தந்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனாரா? புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலில் விழுந்து தானே முதல்வர் ஆனார்?

1971-ல் திமுக பெற்ற வெற்றி என்பது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சை என்பதைத் தானே, 1977, 1980, 1984 தேர்தல்கள் கண்கூடாகக் காட்டின?

மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு முதல்வராகப் பதவியேற்ற மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 2019-ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று, மக்களின் ஆதரவோடு தானே அஇஅதிமுக ஆட்சியைத் தக்கவைத்தார்கள்? 

ஸ்டாலின் கணக்குப்படியே பார்த்தால், மாண்புமிகு எடப்பாடியார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் பேரன்பைப் பெற்ற முதல்வர் தான்!

ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் என்று உங்களை சும்மா சொல்லவில்லை ஸ்டாலின் அவர்களே!

யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அப்படியே வாசிக்காதீர்கள். பகுத்தறிவைக் கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ளவும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMk Raj sathyan reply to dmk mk stalin mgr karunanidhi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->