லைக்குகளுக்காகப் பறிபோன உயிர்கள்! கடப்பாவில் நிகழ்ந்த கோர விபத்து..! - இரு இளைஞர்கள் பலி
Lives Lost Sake Likes Horrific Accident Kadapa Two Youths Killed
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் முபாரக், தனது விறுவிறுப்பான வீடியோக்கள் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் கடப்பா விமான நிலையச் சாலையில் தனது நண்பர் சையத்துடன் இணைந்து மேற்கொண்ட அதிரடி பைக் சாகசம், எதிர்பாராத விதமாகப் பெரும் விபரீதத்தில் முடிந்தது.
கட்டுக்கடங்காத வேகத்தில் சீறிப்பாய்ந்த இருசக்கர வாகனம், நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதிச் சிதறியது.
இந்த கோர விபத்தில் சையத் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழக்க, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முபாரக், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஒரு சில நிமிட 'லைக்'குகளுக்காகவும், இணையப் புகழுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆபத்தான சாகசம், இரண்டு இளம் உயிர்களைப் பலிவாங்கியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lives Lost Sake Likes Horrific Accident Kadapa Two Youths Killed