அரசு கொள்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது! அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை – மீறினால் ஒழுங்கு நடவடிக்கை
Government employees must not criticize government policies in the public domain A warning has been issued disciplinary action will be taken in case of violation
மத்திய அல்லது மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ அரசு ஊழியர்கள் பாதகமாக விமர்சிக்கக் கூடாது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் ஊழியர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் மேற்கண்ட விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு மாறாகச் செயல்படும் ஊழியர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பொதுவெளியில் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பாகத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
English Summary
Government employees must not criticize government policies in the public domain A warning has been issued disciplinary action will be taken in case of violation