“எல்லா மாநிலங்களும் வளரும்போது தமிழகம் வளரவில்லை; ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி குறைந்துள்ளது!” – அண்ணாமலை அதிரடி விமர்சனம் - Seithipunal
Seithipunal


“எல்லா மாநிலங்களும் வளரும்போது தமிழகம் வளரவில்லை. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாயும் குறைந்துள்ளது” என்று வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று கூறிய அவர், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது அனைவரும் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில், நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், கைது நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பெண்கள் வளர்ச்சி மாநாடு இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. ஆறு ஏக்கர் பரப்பளவில், 10 ஆயிரம் பேர் அமரும் வசதியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தேசியம் குறித்து யாரும் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் தற்போது 10 சதவீதம் மட்டுமே உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வி த லீடர்ஸ் அமைப்பு அரசியல் அமைப்பாக மாற்றப்படும்” என்றார்.

மேலும், “அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். திமுக, அதிமுக ஆட்சிகளில் உள்ளூர் பொருளாதாரம் வளரவில்லை. யாரிடமும் கைகட்டி நிற்காத மாநிலமாகத் தமிழகம் உருவாக்கப்பட வேண்டும். அனைவரையும் தலைவர்களாக உருவாக்கும் வகையில் வி த லீடர்ஸ் பயிற்சி அளிக்கும். நாட்டில் யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கிறோம். பொதுவாக ஒவ்வொரு கட்சியும் முதலில் சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டியிடும். ஆனால், வி த லீடர்ஸ் அமைப்பு முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சிஜேபி அமைப்பினர் மீதான கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, அந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரைக் கேள்வி எழுப்பிய அவர், “எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியினர் தூங்கிக் கொண்டிருந்தீர்களா? வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றபோது எல்லோரும் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?” என்று விமர்சித்தார்.

மேலும், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டோம். நம்முடைய இலக்கு வேறு; அவர்களுடைய இலக்கு வேறு. அந்தக் கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்கப் போவதில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

போராட்டம் நடத்துவதற்கான உரிமை குறித்துப் பேசிய அவர், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இந்தியாவில் போராட உரிமை உள்ளதா என்று கேட்டால், இருக்கிறது. அதேபோல திமுகவுக்கும் போராட உரிமை உள்ளது. எப்போதும் ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால், அது வேகமாக மேலே எழும். எனவே, ஆட்சியில் இருப்பவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிரச்சினையைக் கையில் எடுத்து வருகின்றனர்” என்றார்.

இறுதியாக, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய அண்ணாமலை, “எல்லா மாநிலங்களும் வளரும்போது தமிழகம் வளரவில்லை. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது” என்று கூறினார். பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதையும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதையும் இலக்காகக் கொண்டு வி த லீடர்ஸ் அமைப்பு செயல்பட உள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

While all other states are growing Tamil Nadu is not GST collections for August have declined Annamalai sharp criticism


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->