மத்திய கிழக்கு போர்: இந்திய ஏற்றுமதிக்கு ரூ.92,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான தொடர் போரால், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இந்த போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் சுமார் ரூ.75,000 கோடி முதல் ரூ.92,000 கோடி வரை குறைய வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சரக்கு போக்குவரத்து மற்றும் புதிய ஆர்டர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஷிப்மெண்ட்டிற்கு கூடுதலாக ரூ.1.38 லட்சம் முதல் ரூ.3.69 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், வரும் மார்ச் மாத ஏற்றுமதியிலும், 2026 நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் இந்த பாதிப்பு அப்பட்டமாகத் தெரியும் என தொழில் துறையினர் எச்சரிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Middle East War Risk 92000 Crore Loss Indian Exports


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->