சவுதி, குவைத் மீது ஈரான் ஏவுகணை வீச்சு...! - நடுங்கும் வளைகுடா நாடுகள்...!
Iran Launches Missile Attacks Saudi Arabia and Kuwaith Gulf Nations Tremble
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணியாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை இலக்காகக் கொண்டு ஈரான் அதிரடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதே வேளையில், வடக்கு ஈராக்கில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஆதரவு போராளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் பஹ்ரைன் நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் அலறின; சவுதி அரேபியா தனது எண்ணெய் வயல்கள் நிறைந்த கிழக்குப் பகுதியில் இரண்டு ட்ரோன்களையும், குவைத் ராணுவம் ஆறு ட்ரோன்களையும் வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்தி அழித்தன.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஈரானின் வான்வழி அச்சுறுத்தல்களைத் தங்களது பாதுகாப்புப் படை முறியடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தாண்டி, தற்போது அண்டை நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாகத் தகவல் பரவியதால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தொட்ட நிலையில், இன்று 90 டாலராகச் சற்று குறைந்துள்ளது.
"ஹார்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்காவின் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்" என்று டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்த சூழலில், இந்தத் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Iran Launches Missile Attacks Saudi Arabia and Kuwaith Gulf Nations Tremble