ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நாளை 5 புதிய வழித்தடங்களில் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர்...!
Good news train passengers Tomorrow Prime Minister flag off trains five new routes
திருச்சி பஞ்சப்பூரில் நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகத் தமிழகம் வருகை தருகிறார்.
இதற்காக 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மேடை மற்றும் திடல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதில் மேடையேற உள்ளனர்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் மத்திய அரசு விழாவில், தமிழகத்திற்கான 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அந்த வகையில், நெல்லை - மங்களூரு, ராமேஸ்வரம் - மங்களூரு, மயிலாடுதுறை - காரைக்குடி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், நாகர்கோவில் - சாரளப்பள்ளி மற்றும் கோவை - தன்பாத் ஆகிய 'அம்ரித் பாரத்' ரயில் சேவைகளும் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
English Summary
Good news train passengers Tomorrow Prime Minister flag off trains five new routes