நீதி கேட்டு ஓயாத போராட்டம்...! 50 கி.மீ சுற்றிச்செல்லும் வாகனங்கள்...! - ஆகாஷ் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
Unceasing Protest Demanding Justice Vehicles Forced Take 50 km Detour High Court Issues Order Akash Case
சிவகங்கை அருகே அரிவாள் வெட்டு வழக்கில் கைதான ஆகாஷ் டெலிசன் (27), காவலர்களிடம் இருந்து தப்ப முயன்று பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிந்ததாகத் தெரிவித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்து, உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நிவாரண நிதி மற்றும் அரசு வேலை கேட்டு கடந்த மூன்று நாட்களாக மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்து சுமார் 50 கி.மீ தூரம் வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டு மற்றும் மருத்துவமனை டீன் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு நீதிபதி அறிவுறுத்தியும், தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
English Summary
Unceasing Protest Demanding Justice Vehicles Forced Take 50 km Detour High Court Issues Order Akash Case