2 லட்சம் பள்ளிச் சிறார்களுக்கு கண் குறைபாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
ma sybramaniyan eye issue
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாவது,
பரிசோதனை நிலவரம்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27,90,093 பள்ளிச் சிறார்களுக்குக் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறைபாடுகள் கண்டறிதல்: இதில் 2,00,214 குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிறார்களில் 14.3% குறைபாடுகளைக் கண் கண்ணாடி மூலம் சரி செய்ய வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்ட இலக்கு: மீதமுள்ள பள்ளிச் சிறார்களுக்குப் பரிசோதனை முடிந்து, கண்டறியப்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப, இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 3 லட்சம் சிறார்களுக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காணப்படும் பொதுவான கண் குறைபாடுகளின் விகிதங்களையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கண்புரை (Cataract) 82% ஆகவும், விழித்திரை பாதிப்பு 5.6% ஆகவும், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1% ஆகவும், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3% ஆகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
ma sybramaniyan eye issue