இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயலாளர்கள் கூட்டம்.!
today dmk excuetives meeting in chennai anna arivalaiyam
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக சார்பில் 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாகத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
இதற்கிடையே திமுக தமிழ்நாடு முழுவதும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு மூலமாகப் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகித உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதனை 40 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரம் வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த பிரச்சாரத்தை நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
today dmk excuetives meeting in chennai anna arivalaiyam