'டீ சர்ட்' சர்ச்சை: யார் உரிமை கொடுத்தது...? எனக்கு அவர்கள் யார்..? அது எனக்கு பிடிக்கவில்லை..! சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சியை விளாசிய மின்டா தேவி..!
Minda Devi slams opposition including Sonia asks who gave them the right to wear T shirts featuring her picture
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சர்ச்சையில் சிக்கிய மின்டா தேவி கூறியுள்ளார்.
இதன் போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உட்பட ல எம்.பி.,க்கள் 'டி சர்ட்' அணிந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்தனர். அதன் முன்பக்கத்தில், ஒரு பெண் புகைப்படமும், அதன் கீழ், 'மிண்டா தேவி' என்றும், பின்புறத்தில், '124 நாட் அவுட்' என எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக பிரியங்கா உள்ளிட்ட பெண் எம்.பி.,க்கள் இந்த டி சர்ட்டை அணிந்து வந்தனர். நாடு முழுவதும் இந்த 'டி சர்ட்' அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த 'டி சர்ட்' -இல் உள்ள பெண்மணி, பீஹாரைச் சேர்ந்த முதல்முறை வாக்காளராக மிண்டா தேவியின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது. இவரது வயது 124 என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிலும் உலகிலேயே 115 வயதுடைய நபர் தான் மிகவும் வயதானவர் என, கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், அவரைக் காட்டிலும் 09 வயது மூத்தவராக மிண்டா தேவி இருக்கிறாரா..? என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியது. அத்துடன், இந்த வயதில் மிண்டா தேவி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும், அவரது பெயரை வைத்து கள்ள ஓட்டுப்போட்டிருக்க வேண்டும் என, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதை குறிக்கும் விதமாகவே, மிண்டா தேவியின் பெயரையும், வயதையும் குறிப்பிட்டு, 'டி சர்ட்' அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,''எனது படம் இடம்பெற்ற டி சர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது..? அவர்கள் செய்தது எனக்கு பிடிக்கவில்லை '' என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த சர்ச்சையில் சிக்கிய மின்டா தேவி அதிரடியாக கூறியுள்ளார்.
இது குறித்து மின்டா தேவி அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது புகைப்படம் அடங்கிய டீ சர்ட்டை அணிய யார் உரிமை கொடுத்தது. எனக்கு அவர்கள் யார்.. ? பிரியங்கா, ராகுல் எனக்கு என்ன உறவு..? எனது புகைப்படம் அடங்கிய டீசர்ட்டை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்...? அதனை அவர்கள் செய்திருக்கக்கூடாது. அது எனக்கு பிடிக்கவில்லை... என்று சரமாரியாக பேசியுள்ளார்.

அத்துடன், வாக்காளர் பட்டியல் விவரங்களில் முரண்பாடு உள்ளது. அரசு தரப்பிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், எனது வயது தொடர்பாக அவர்கள் எனது நலம் விரும்பியாக மாறியது ஏன்..? எனது விவரங்கள் சரி செய்யப்பட வேண்டும். எனது விவரங்களை பதிவு செய்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்தனரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு ஆவணங்களின்படி எனது வயது 124 என்றால் எனக்கு ஏன் முதியோர் பென்சன் வழங்கவில்லை என்றும், ஆதார் கார்டில் எனது வயது 15.07.1990 எனக்குறிப்பிடப்பட்டு உள்ளது என்று பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், 'வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக வயது தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த வாக்காளரின் வயது, 35 தான். இது சரி செய்யப்படும்' என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Minda Devi slams opposition including Sonia asks who gave them the right to wear T shirts featuring her picture