சென்னையில் பரபரப்பு: போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டு கட்டாக கைது: போலீசார் மற்றும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு..!
Protesting sanitation workers arrested in Chennai at midnight
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16-ஆம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 01 முதல் தற்காலிக துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 நாட்களாக தொடர்ந்த இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்கிரஸ், நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) நள்ளிரவு அதிரடியாக களம் இறங்கிய அப்பகுதி போலீசார் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றியுள்ளனர் இதனால் அங்கு போராட்டக்கார்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது.
தற்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட பணியாளர்கள் அ்பபுறப்படுத்தப்பட்டதால் வட சென்னை முழுவதும் போலீசார் ரோந்து வாகனத்தில் சுற்றி வருகின்றனர்.
English Summary
Protesting sanitation workers arrested in Chennai at midnight