பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.! வெளியாகும் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்புகள் ? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனிடையே இந்திய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவிய தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

ஆனால் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரு நாளுக்கு இறப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்நிலையில்,  பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு தளர்வு குறித்த சில அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today cm palanisami video confrence with modi


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal