தமிழகத்தில் போதை பொருள் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு..!!
TNPolice announced whatsapp number for complaint related to drug sale
தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டை போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகப்படுத்தவும், மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தவும் காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக காவல்துறை சார்பில் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 9498111191 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TNPolice announced whatsapp number for complaint related to drug sale