மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன், விண்ணப்பம் ஜூலை 20 முதல் விநியோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின்னினைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என் போன்ற 10 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவது தொடர்பான பயிற்சி அனைத்து நியாய விலை கடை பணியாளர்களுக்கும் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. 

மேலும் வரும் ஜூலை 18 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். 

அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt rs1000 scheme tokens application distribution from July20


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->