தமிழகம் முழுவதும் "பழுதடைந்த மின் மீட்டரை" உடனே மாற்ற உத்தரவு.. மின்வாரியம் அதிரடி.!!
TNEB order to replace faulty electricity meters across TamilNadu
தமிழக முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பொறியாளர்களுக்கு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். நுகர்வோரின் வசதி, உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என தலைமை நீதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி அனைத்து வட்டார மின் பகிர்மான முதன்மை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English Summary
TNEB order to replace faulty electricity meters across TamilNadu