மின் கட்டணம் உயர்வு || வீட்டு நுகர்வோருக்கு பாதிப்பில்லை.. தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


 

மத்திய அரசின் மின் அமைச்சகம் மின்சார விதிகளில் அண்மையில் திருத்தம் செய்து கட்டாயமாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் விவசாயிகளை  தவர மற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் நாள் நேர கட்டண விதிகளை மத்திய அரசு திருத்தி உள்ளது

அதன்படி வரும் 2024 ஏப்ரல் 1 முதல் அதிகபட்சமாக 10 கிலோ வாட் மற்றும் அதற்கும் அதிகமான தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ToD கட்டணத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அதே போன்று ஏப்ரல் 1, 2025 முதல் பீக் அவர்ஸில் புதிய கட்டண மாறுபாடு கட்டணம் மற்ற பொதுமக்களுக்கும் அமல்படுத்த மத்திய மின்துறை அமைச்சகம் விதிகளில் திருத்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே சிங் கூறுகையில் "ToD கட்டணம் நுகர்வோர் மற்றும் மின்சாரம் வழங்குபவர்களுக்கு நல்ல பலன் தரும். பீக் நேரங்களில் ஒரு கட்டணம், சூரிய ஒளி இருக்கும் நேரம் ஒரு கட்டணம் மற்றும் சாதாரண நேரங்களுக்கு ஒரு கடட்ணம் என தனித்தனி கட்டணங்கள் இருக்கும். இதுவே ToD கட்டணங்கள் ஆகும். இதன் மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை குறைத்துக்கொள்ள முடியும்" நான் விளக்கம் அளித்துள்ளார். இதனால் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் உயரும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும், மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNEB explained there is no impact on domestic consumers in electric bill hike


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->