காலாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
TN School Quarterly Exam Schedule 2023
தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு, மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பொது காலாண்டு தேர்வு அட்டவணை சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் பொது காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக வெளியான அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 27ஆம் தேதி தேர்வு நிறைவடைய உள்ளதாகவும் அதில் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளதாகவும், 27ஆம் தேதி நிறைவடைவதாகவும் வெளியான அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டு தேர்வு பொதுத்தேர்வாக நடத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை குறித்து முன்பு வெளியான அறிவிப்பு:
ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி முதல், அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல், அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
English Summary
TN School Quarterly Exam Schedule 2023