கடந்த 36 மணி நேரத்தில் 12 படுகொலை தான் நடந்திருக்கு - தமிழக காவல்துறை விளக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிக்கை விடுத்திருந்த நிலையில், 12 கொலைகள் தான் நடந்துள்ளதாக தமிழக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த அறிக்கையில், "கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் 2208.2022 அன்று 7 கொலைகளும், 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும் 2019 ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது.

ஆகவே முந்தைய 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு, 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன" என்று தமிழக போலீஸ் விளக்கமளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN murder rate report 36 hours


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->