அரசு பள்ளிகளில் செப்டம்பர் 15ம் தேதி காலை உணவு தொடக்கம்.?  வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் இருந்து பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைசச்சர் மு.க ஸ்டாலின், கடந்த மே மாதம் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும்.  1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு  ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN govt school breakfast starts in September 15


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->