ஸ்டாலின் 6 வருடம் தேர்தலில் நிற்பது கேள்விக்குறி? விருதுநகரில் விஸ்வரூபம் எடுத்த இபிஎஸ்!   - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, "விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பட்டாசுக்கு தடை விதித்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தடையை நீக்குமாறு கடிதம் எழுதினேன். மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நபர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதனை விளக்க வேண்டும். அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின், விரக்தியின் விளிம்பிற்கு சென்று வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து கூறுகிறார். கலைஞர் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் தான் அமைச்சர் சிகிச்சை பெற்றார். அமைச்சர் மரணத்தில் என்ன மரணம் என்பதை அவர் கூற வேண்டும்.

"ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது, 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பதே கேள்விகுறி, தம்மீது உள்ள குற்றத்தை எண்ணிப்பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும். திமுக அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது எனவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN CM Palanisamy Speech in Viruthunagar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->