கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே குட் நியூஸ்…! - முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள்
Southern Railway Good News Christmas New Year Passengers Special trains major routes
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் தெற்கு ரெயில்வே பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"சென்னை – மங்களூரு வழித்தடம்
கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ஆம் தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06126), அதே நாளில் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து 24 மற்றும் 31 தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125), இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சனை சென்றடையும்.

ஈரோடு – நாகர்கோவில் சிறப்பு சேவை
ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 24 மற்றும் 31 தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
செகந்திராபாத் – வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து 25-ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத்தை அடையும்.
பெங்களூரு – கொல்லம் சிறப்பு சேவை
பெங்களூருவில் இருந்து 25-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06573), மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூருவை அடையும்.பண்டிகைக் காலத்தில் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
Southern Railway Good News Christmas New Year Passengers Special trains major routes