மதுபோதையில் தந்தை செய்த கொடூரம்...! - தூங்கிக் கொண்டிருந்த 4 வயது மகன் பலி...!
brutality drunken father 4 year old son killed while sleeping
உத்தரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்டம், கவாலி கிராமத்தில் மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவருக்கு திருமணமாகி, மனைவியுடன் 4 வயது மகன் விகாஸ் இருந்தான்.
மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குடும்ப வாழ்க்கை தொடர்ந்து சண்டை, குழப்பம் என சீர்குலைந்து வந்த நிலையில், நேற்று அந்த வீடு பேரதிர்ச்சிக்கு ஆளானது.
நேற்றிரவு மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்த ராம்ஜிக்கும், அவரது மனைவிக்கும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த கோபத்தின் உச்சத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது சொந்த மகன் விகாசை ராம்ஜி கொடூரமாக தரையில் வீசி அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த சிறுவனை அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள ராம்ஜியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுவால் ஒரு குழந்தையின் உயிர் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brutality drunken father 4 year old son killed while sleeping