அணு அணுவாக அரசனை செதுக்கும் வெற்றிமாறன்.. படப்பிடிப்பு தள வீடியோ வெளியீடு! STR க்கு லைப் டைம் செட்டில்மெண்ட் ரெடி - Seithipunal
Seithipunal


வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால், படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘அரசன்’ டைட்டில் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதில் சிம்புவின் இரண்டு லுக்குகள், கோர்ட் காட்சி, கொலை காட்சி மற்றும் அனிருத் அமைத்த பின்னணி இசை ஆகியவை கவனம் ஈர்த்தன. வெற்றி மாறன் – சிம்பு – அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதே படத்திற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தற்போது வெளியான படப்பிடிப்பு தள வீடியோவை பார்த்த ரசிகர்கள், “வெற்றி மாறன் தனது ‘அரசன்’ படத்தை அணு அணுவாக செதுக்குகிறார்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9ஆம் தேதி முதல் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு, சிம்பு ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அவர்கள் தரும் பரிசுகளை ஏற்றுக் கொள்வதும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அரசன்’ படத்தின் கதை, படுகொலை செய்யப்பட்ட மயிலை சிவக்குமாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், டைட்டில் ப்ரோமோ படப்பிடிப்பு காலத்தில் சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வந்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால், அவர்கள் படத்தில் நடிக்கிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vetrimaaran who carves the king atom by atom Shooting site video released Lifetime settlement ready for STR


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->