சேப்பாக்கம் வேணாம்! கலைஞரின் சொந்த ஊரில் களமிறங்கும் திட்டமா? –உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வியூகம்! உற்சாக உ.பி.கள்!
Donot want Chepauk Is there a plan to contest in Thiruvarur Udayanidhi Stalin political strategy UP voters are excited
வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் முக்கிய அரசியல் நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தொகுதி மாற்றி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி, தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
திருவாரூர் மாவட்டம் கலைஞரின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய முக்கிய தளமாக கருதப்படுகிறது. அவர் திருவாரூர் தொகுதியில் இருந்து இரு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த அரசியல் பாரம்பரியத்தை தொடரும் வகையில், உதயநிதி திருவாரூரில் இருந்து களமிறங்கினால், அது திமுகவின் முக்கிய அரசியல் வியூகமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றே திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று தேர்தல்களிலும் கொளத்தூரில் வெற்றி பெற்ற ஸ்டாலின், அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அவரது மீண்டும் அங்கு போட்டியிடுவது உறுதி என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற்றம் குறித்த இந்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில், திமுக தலைமை இதுகுறித்து இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Donot want Chepauk Is there a plan to contest in Thiruvarur Udayanidhi Stalin political strategy UP voters are excited