உத்தராகண்டில் இருந்து ஈராக்கிற்கு 24 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்ய ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


ஈராக்கிற்கு 24 மெட்ரிக் டன் உறைபடுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

முதன் முறையாக உத்தராகண்ட்டில் இருந்து குறித்த உருளைக்கிழங்கு வறுவல் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. விருண் குளோபல் டிரேட் தனியார் நிறுவனம் சார்பில் இந்த ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவிப்பதில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இப்பொருட்களின் தரம் சர்வதேச சந்தைகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கும், நீண்டகால வர்த்தக உறவைப் பராமரிப்பதற்கும் உதவும் என்றும்,குறித்த நிறுவனத்திற்கும் பிராந்தியத்திற்கும் நீடித்த ஏற்றுமதி வாய்ப்புகளை அளிக்கும் என்றும் ஏற்றுமதியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrangements to export 24 metric tons of potato chips from Uttarakhand to Iraq


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->