'நீட் தேர்விற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் கண்டனத்திற்கு உரியது'; அமைச்சர் நிர்மல் குமார்..!
Minister Nirmal Kumar says attacks on students protesting against NEET exam are condemnable
சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியது என்று கூறியதோடு, நீட் தேர்வு நமக்கு தேவையில்லை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது. இந்த தேர்வை ஒன்றிய அரசு மட்டுமே தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அது போல ஒரு பொய்யான கருத்தை நாங்கள் சொல்ல முடியாது என்றும், நீட் தேர்வை மத்திய அரசு, நீதிமன்றம் தீர்ப்பு மூலம் கொண்டு வந்தது. எனவே முறையாகத்தான் இதற்கு முடிவு கொண்டு வர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என கூறுவது பொய் என்றும், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குளறுபடிதான் நடக்கிறது. எனவ, இந்த குளறுபடியான தேர்வில் தரமற்றவர்கள் மருத்துவராக வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நீட் தேர்வை நடத்த முடியாத சூழலில்தான் நிர்வாகம் உள்ளதாகவும், அந்த தேர்வே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர் அதற்கு, ''ஏற்கனவே கட்சியின் சார்பாக நாங்கள் எங்கள் கண்டனங்களையும், நிலைப்பாட்டையும் தெரிவித்துவிட்டோம்'' என்று அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
English Summary
Minister Nirmal Kumar says attacks on students protesting against NEET exam are condemnable