மங்காத்தா ரீ ரிலீஸ் அரசியல் நகர்வா? – விஜய் ரசிகர்களுக்கு வந்தா ரத்தம்.. அஜித் ரசிகர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள விஷயம் அஜித் நடித்த மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்புதான். இந்த ரீ ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவே வெளியிட்டதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், சிலர் இதை அரசியல் நோக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மங்காத்தா ரீ ரிலீஸ் என்பது திமுகவின் அரசியல் நகர்வு என்றும், இது விஜய் நடித்த ஜன நாயகன் படத்தின் வசூலை பாதிக்க திட்டமிடப்பட்டதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு அஜித் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் கூறுவதாவது, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகி, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.

அந்த படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்தபோது, அது குட் பேட் அக்லி படத்தின் வசூலை ஓரளவு பாதித்தது. அப்போது இதை யாரும் அரசியலாக பேசவில்லை. இப்போது மட்டும் மங்காத்தா ரீ ரிலீஸ் ஆனாலே அரசியல் என பேசுவது சரியா என்ற கேள்வியை அஜித் ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

“உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்ற வகையில் விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவாதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மங்காத்தா படம் வரும் ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the re release of Mangatha a political move If Vijay fans got blood Ajith fans got tomato chutney


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->