ஈரோடு தவெக பொதுக்கூட்டத்திற்கு இவங்களாம் வந்தார்களா? விஜய் பேச்சை கேட்க இல்லையாம்?–உளவுத் துறை ரிப்போர்ட்! தவெக ஷாக்! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் கலந்து கொண்டதாக மத்திய உளவுத் துறையின் தமிழக பிரிவு தயாரித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, விஜய் பங்கேற்ற ஈரோடு பொதுக்கூட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மத்திய உளவுத் துறையின் தமிழக பிரிவுடன் இணைந்து கேரளாவிலிருந்து வந்த அதிகாரிகள், ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் நேரடியாகக் கேள்விகள் எழுப்பினர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய்க்கு பொதுக்கூட்ட அனுமதி மறுக்கப்பட்ட காலம் குறித்த பொதுமக்களின் மனநிலை, தவெகவினர் என்ன நினைக்கிறார்கள் என்பதுபோன்ற 30-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு 43 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 35 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்த வாகனங்களை ஆய்வு செய்தபோது, பல வாகனங்களில் பிற கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்திலிருந்து சுமார் 70 சதவீதம் பேரும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து 30 சதவீதம் பேரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக உளவுத் துறை மதிப்பீடு கூறுகிறது.

இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தவெக கொடி அசைத்த ஒரு இளைஞர் குறித்து சர்ச்சை எழுந்தது. விசாரணையில் அவர் அதிமுக அடையாளம் கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்ததாக கூறப்பட்டாலும், இதை அதிமுக தரப்பு மறுத்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய் தொடர்ந்து மக்கள் சந்திப்புகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிமுக மற்றும் பாஜக குறித்து அவர் நேரடியாக பேசாமல் தவிர்ப்பதும் அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது. இந்த தேர்தலில் தவெக ஓட்டுகளைப் பிரிக்கும் சக்தியாக செயல்படக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did these people come to the Erode Tvk public meeting Didnot they come to listen to Vijay speech Intelligence Department Report Tvk Shock


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->