நடிகராகவே சேவை போதும்...! - செய்தியாளர் கேள்விக்கு சிவராஜ்குமார் ஓப்பன் டாக்...!
Service actor enough Sivarajkumar Open Talk Press Question
கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரம் சிவராஜ்குமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ள புதிய படம் ‘45 தி மூவி’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ராஜ் பி. செட்டி மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற அர்ஜுன் ஜன்யா இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கனவு–கற்பனை (Fantasy) கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிவராஜ்குமார் தற்போது படக்குழுவுடன் இணைந்து தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர் ஒருவர் அரசியல் தொடர்பான கேள்வியை முன்வைத்தார்.
“தமிழகத்தில் எம்.ஜி.ஆர் காலம் முதல் விஜய்காந்த், சரத்குமார், விஜய் வரை பல நட்சத்திர நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ராஜ்குமார் குடும்பத்தினர், உபேந்திரா, நீங்கள் போன்றவர்கள் அரசியலுக்கு வராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.“மக்களுக்கு நல்லது செய்ய அதிகாரம் அவசியம் இல்லை. நடிகராக இருந்துகொண்டே சமூகத்திற்கு நல்லதை செய்ய முடியும்.
அதற்காக அரசியலுக்கே வர வேண்டிய கட்டாயம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.மேலும், சிவராஜ்குமாரின் இந்த பதில், மேடையில் இருந்தவர்களிடமும் சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து, ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.
English Summary
Service actor enough Sivarajkumar Open Talk Press Question