விருந்தாக தொடங்கிய இரவு… விடுதி அறையில் நடந்த கொடூரம்...! - பெங்களூருவில் மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
night started party brutality that happened hostel room shocking incident happened student Bengaluru
பெங்களூருவில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தம்பதியின் மகள், நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த இரவு விருந்துக்குச் செல்லும் நோக்கில், அவருடன் படிக்கும் ஆண் நண்பருடன் வெளியே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மாணவர், தன்னுடன் மேலும் இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, எலகங்கா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அங்கு மூன்று பேரும் மது அருந்தியதாகவும், மாணவியையும் வற்புறுத்தி மது குடிக்க வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபோதையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவியை, அவரது நண்பரான அந்த மாணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அவரது நண்பர்கள் இருவரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
night started party brutality that happened hostel room shocking incident happened student Bengaluru