#TNBUDGET2023 : அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டபேரவையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார். இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். 

சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா   நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும். சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய, புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டிடங்கள் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும்.

சென்னையில் உள்ள நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ25 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Budget 2023 all districts Book festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->