அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு!
TN Assembly Minister announce govt staffs
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும், போப் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கவுள்ளதாகவும், புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுந்தது.
மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமாரவேல், "பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?" என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஓய்வூதிய முறைமையை ஆய்வு செய்ய, உயரதிகாரி ககன்தீப் சிங் பேடியின் தலைமையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசித்து, உரிய காலத்திற்குள் தெளிவான முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
English Summary
TN Assembly Minister announce govt staffs