#BREAKING : வரலாற்றில் முதல்முறையாக... ஆளுநரின் செயலால் சட்டமன்ற உறுப்பினர்கள் வருத்தம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம்(ஜன.9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் சில பகுதிகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருக்கும் பொழுது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத நிகழ்வாக அமைந்தது.

இந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் திருத்தப்பட்ட தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுவித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது. 

பேரவையின் மாண்பை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 9ம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட மாண்புமிகு ஆளுநர் அவர்களின் பேருரை பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர்." என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட தீர்மானம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத வகையில் ஆளுநர் உரைக்கு வருத்தம் தெரிவித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn assembly bring resolution for regretting on tn Governor action


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->