திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் தவறான சிகிச்சையால் மரணமா? சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!
Tiruvannamalai pregnant women died
திருவண்ணாமலை மாவட்டம்: செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செவ்வந்தி (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
செவ்வந்தி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவருக்கு திடீரென நேற்று பிரசவ வலி ஏற்பட்டு, செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெண் பிறந்தது.

இதனால் செவ்வந்திக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் கருபையை நீக்க மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை திடீரென செவ்வந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, செவ்வந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டதும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம். ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம், என தெரிவித்தனர். தற்போது செவ்வந்தி உயிரிழந்துவிட்டார்.
இதேபோல் இந்த அரசு மருத்துவமனையில் மூன்றாவது பிரசவத்திற்கு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் பலியாகி உள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, போலீசாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அவர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை வேலூர் புறநகர் சாலையில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Tiruvannamalai pregnant women died