இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு.. எஸ்.இ.டி.சி பேருந்தை ஜப்தி செய்த அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற உத்தரவை கண்கொள்ளாமல் இழப்பீடுக்கு இழுத்தடித்து போக்குவரத்து கழகத்தால், அரசு விரைவு பேருந்து நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம், படவேடு சாமந்திபுரம் கிராமத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் அர்ஜுனன். இவர் கடந்த 2004 ஆம் வருடத்தில், சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். 

அர்ஜுனனின் மனைவி வள்ளியம்மாள் மற்றும் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே, வழக்கை விசாரணை செய்த நீதிபதி லாரி ஓட்டுநர் அர்ஜுனனின் குடும்பத்தினருக்கு ரூ.6 இலட்சத்து 68 ஆயிரம் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். 

இந்த தொகையை போக்குவரத்து கழகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அர்ஜுனனின் குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதன்பின்னர், வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ரூ.6 இலட்சத்து 72 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். 

இந்த தொகையையும் கொடுக்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தவே, மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி திருமகள், அரசு விரைவு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார். 

நேற்று திருச்சியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக வேலூர் சென்றுகொண்டு இருந்த அரசு விரைவு பேருந்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பேருந்தை ஜப்தி செய்தனர். பேருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் வேலூர் செல்ல மாற்று பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு வேலூர் சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Arani Near Kannamangalam SETC Bus Confiscated by Court Officers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->